முல்லைத்தீவை சேர்ந்தவரான ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முதல் மேல் நீதிமன்ற நீதிபதி
என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 8 நீதிபதிகளை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
வழங்கினார். அவர்களில், இவர் ஒருவரே தமிழராவார்.
முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான்
நீதிமன்றங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.