எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
தமிழ் – சிங்கள புதுவருடம் எதிர்வரும் 13ஆம் திகதியாகும். மறுநாள் பொது விடுமுறையாகும். ஆனால்,
இம்முறை புதுவருடப் பிறப்பு சனிக்கிழமை பிறக்கின்றது. இது வழக்கமாகவே விடுமுறை தினமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் திங்கட் கிழமையை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது வழக்கம். இதேபோன்று, எதிர்வரும் 15ஆம் திகதியை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும், அன்றைய தினத்தை
விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.