இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா!

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா!

editor 2

பிரித்தானியா தமது பிரஜைகளுக்கான இலங்கைக்கான பயண ஆலோசனைகளை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த பயண ஆலோனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றின் தகவல்களை பிரித்தானிய புதுப்பித்துள்ளது.

அதன்படி உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்த தமது முந்தைய ஆலோசனைகளை பிரித்தானியா திருத்தியமைத்துள்ளது.

Share This Article