முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த யுவதிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் 23,24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளனர்.