மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையற்ற ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
தேசிய பாடசாலை ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கு இடம் மாற்றும் நடவடிக்கையில் குறித்த கல்விப்பணிப்பாளர் ஈடுபட்டுவருவதாகவும் அதனைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின்னர் குறித்த போராட்டம் பாடசாலை முன்றலில் ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
https://web.facebook.com/thamilnewslk/videos/1557101535144406