பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ராஜபக்ஷ தரப்பினர் இந்த நாட்டின் மீதோ மக்கள் மீதோ அக்கறை கொண்டவர்கள் அல்லர்.
மாறாக அவர்கள் தங்களின் அரசியல் தேவைகளுக்காகவே செயற்படுகின்றனர்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை நாட்டு மக்கள் நன்கு அறிவர்
எனவே நாமல் ராஜபக்ஷ எந்த வொரு வேடம் தரித்து வந்தாலும் மக்களுக்கு ராஜபக்ஷ தரப்பினர் மீது நம்பிக்கை ஏற்படாது.
திருகோணமலையில் ஒழிந்திருந்த ராஜபக்ஷ தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் புண்ணியத்தால் வெளி உலகுக்கு வந்தனர்.
இன்று நாமல் குடும்ப அரசியல் தேவைக்காக அடித்தளமிட்டுள்ளார். ஆனாலும் பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் செயற்பட முடியாது. ஏனென்றால் பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவே முன்னிலையாவார்.
ரணில் ராஜபக்ஷ தரப்பினரின் அரசியல் நாடகங்களை மக்கள் நன்கு அறிவர்-என்றார்.