ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என அவர்
கூறினார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான எழுதுகருவிப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தேர்தல் தொடர்பில் அனைத்து உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்