கனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை மா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி 25 மற்றும் 50 கிலோ கிராம் நிறையுடைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த தொகை கோதுமை மா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட கோதுமை மாவில் நச்சுப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டு
காலாவதியடையும் திகதிகள் என்பன மாற்றியமைக்கப்பட்டு புதிதாக பொதி செய்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்ததாக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேலும்
தெரிவித்துள்ளது.