ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அமெரிக்கா ஆதரிக்கவேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அமெரிக்கா ஆதரிக்கவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

editor 2

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்புமுறையை (Referendum) ஆதரிக்கவும். 

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும். அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும். 

3. சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் – பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட- உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article