எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கே கிடைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற்றே தீரும். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை.
ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில்தான் தேர்தலில் வெற்றியடையப் போகின்றார்.
எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை.
அவரின் வெற்றி சரித்திர வெற்றியாகப் பதியப்படும். சிங்கள மக்களுக்கு மாத்திரமில்லாமல் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை மிகுந்த தலைவராக ரணில் விளங்குகின்றார்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரம சிங்கவுக்கே கிடைக்கும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்
தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை விடமாட்டார்கள் – என்றார்.