வடக்கில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்று பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் 52 பேர் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள் தொடர்பான சந்தேகத்தில் 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் 14 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 44 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
காங்கேசன்துறையில் 5 கொலைகள் இடம்பெற்றன. 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் நீதி மன்ற பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 4 கொலைகள் இடம்பெற்றுள்ளன. அத்தடன், அங்கு 11 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 8 கொலைகள் இடம்பெற்றன. சந்தேகத்தின் அடிப்படையில் 17 பேர் கைதாகினர். 4 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 கொலைகள் இடம்பெற்றன. சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் கைதாகினர். 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 13 கொலைகள் இடம்பெற்றுள்ளன. சந்தேகத்தின் அடிப்படை யில் 37 பேர் கைதாகினர். 5 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.