எஞ்சிய நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது வெற்றி எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்ததாக பிரதமர் தெரிவித்தார். நாடு வளர்ச்சியை நோக்கிய நிலையான பாதையை அடைந்துள்ளதால், சர்வதேச நாணய
நிதிய பிரதிநிதிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
இதன்படி, எதிர்கால நிதியுதவியை விரைவில் வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.