கனடா செல்ல முற்படுவோருக்கு சிக்கல்!

கனடா செல்ல முற்படுவோருக்கு சிக்கல்!

editor 2

கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது .

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கட்டுப்பாடு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வீட்டுப் பற்றாக்குறைக்கு தீர்வாகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சில மாநிலங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் 2023க்குள், கனடாவில் 2.5 மில்லியன் மக்கள் தற்காலிக அடிப்படையில் வாழ்கின்றனர் என்றும் இதை 20% குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கு பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share This Article