உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; ஆணைக்குழு அறிக்கையில் 1500 பக்கங்கள் இல்லை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; ஆணைக்குழு அறிக்கையில் 1500 பக்கங்கள் இல்லை!

editor 2

திருச்சபைக்கு அரசாங்கம் வழங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என
கர்தினால் மல்கம் ரஞ்சித்தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆறு இறுவட்டுகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது.

நாங்களும் சட்டத்தரணி களும் அதனை ஆராய்ந்தோம் 70 ஆயிரம் பக்கங்கள் உள்ளன. எனி
னும், அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை.

சஹ்ரான் ஹாசிமின் மனைவி, தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் எனக் கூறப்படும் சாரா ஜஸ்மின் போன்றவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் அடங்கிய பக்கங்களை அரசு எங்களிடம் தரவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக வழங்க வேண்டும் என நாங்கள் பலமுறை கடிதங்களை எழுதிய பிறகு அரசாங்கம் ஆறு இறு
வட்டுகளை வழங்கியது.

அமைச்சர்கள், அதிகாரிகள் 99 வீத விசாரணைகள் முடிவடைந்துவிட்டன எனத் தெரிவிக்கின்றனர். எனினும் நாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்தவேளை அது உண்மையில்லை என்பதை உணரமுடிந்தது.

சஹ்ரானை அவரின் குழுவை சேர்ந்தவர்களை தெரிந்த 23 முஸ்லிம்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த அனைத்து விடயங்களையும் விசாரணை
செய்வதை தவிர்த்துள்ள அரசாங்கம் தற்போது இவர்களை பலிகடாக்களாக்க முயல்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இந்த வருடத்துடன் ஐந்து வருடங்களாகின்றன.

நாங்கள் புதிய சுயாதீன விசாரணைகளை கோரிவரும் நிலையில் அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை முன்வைக்கின்றனர்.

இதேசமயம், ஆசாத் மௌலானா போன்றவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் வெளியான புதிய ஆதாரங்கள் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை – என்றும் கூறினார்

Share This Article