கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன!

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன!

editor 2

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேரின் இறுதி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளன.

ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30 க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானதுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இரவு பெண் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளுமாக மொத்தமாக 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர் நேற்று ஒட்டாவாவில் உள்ள மாநாட்டு மண்டபமொன்றில் 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.

ஹில்டா ஜயவர்தனராமய பௌத்த நிலையம் மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை சமூகத்தினரின் உதவியுடன் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கனேடிய பௌத்த சம்மேளனத்தின் தலைவர் நாரத கொடிதுவுக்கு இந்த சம்பவத்தின் பின்னர் கனேடிய அரசாங்கம், கனடாவில் வாழும் இலங்கை சமூகம் மற்றும் கனேடியர்களின் பங்களிப்புக்காக நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த 6 இலங்கையர்களின் நினைவாக கனடாவில் வாழும் இலங்கை கத்தோலிக்க சமூகமும் நேற்று ஆராதனையை நடத்தியது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், இறந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article