மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் கடலில் தவறி வீழந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைமன்னாரை சேர்ந்த அவர் படகில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தபோதே தவறி கீழே விழுந்தார்.
ஏனைய மீனவர்களின் உதவியுடன் அவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு, பியர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.
56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.