யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் காரில் கடத்திச் செல்லப்பட்டு வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ாளர்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கும்பல் ஒன்று வழிமறித்ததாகவும் அவர்கள் இருவரும் அருகிலிருந்த கடற்படை முகாமில் தஞ்சமடைய முற்பட்டபோது கடற்படையினர் அவர்களை வெளியேற்றியதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் அவர்களில் இளைஞரை காரில் கடத்திய கும்பல் அவரை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு வட்டுக்கோட்டை வைத்தியசாலைப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றதாகவும் பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் அனுப்பியபோது அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை,
மனைவியை மற்றொரு காரில் கடத்திய கும்பல் சித்தங்கேணியில் ஒரு வீட்டில் அடைத்துவைத்திருந்த நிலையில் அங்கிருந்த அயலவர்கள் சூழ்ந்ததால் அவரை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தாக அயலவல்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
முன்விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.