நாட்டில் மேலும் 2 சட்ட மூலங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை!

நாட்டில் மேலும் 2 சட்ட மூலங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை!

editor 2

நாட்டில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவளுக்கான பலம் – அவளுக்கான முன்னேற்றம் என்ற தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் போது, எமது நாட்டில் விழா நடத்துவது, பெண்களின் உரிமைகள் பற்றி பேசிவிட்டு வீடு திரும்புவதுதான் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.


இது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றது.

ஆனால் இந்த முறை அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்களின் குரலை செயல்படுத்த நாம் முடிவு செய்துள்ளோம். பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்பது வெறும் பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது
இந்த ஆண்டு மகளிர் தினத்தை கொண்டாடும் பெண்கள் சட்டத்தின் அதிகாரத்துடனும் பாதுகாப்புடனும் வீடு திரும்புவார்கள்.

ஆசியாவிலேயே முதன்முறையாக எமது நாட்டில் பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஆசியாவிலேயே முதன்முறையாக இது நடக்கிறது. கனடா உட்பட இரண்டு மூன்று நாடுகளில் மட்டுமே இது நடைமுறையில் உள்ளதுபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

பெண்கள் வலுவூட்டல் சட்ட வரைபு நேற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. பாலின சமத்துவ சட்ட வரைபையும் எதிர்வரும் வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு ஸ்தாபிக்கப்படும்.

அதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்து அறிக்கை தயாரித்தேன். 2018ஆம் ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் எங்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

அதன் பின்னர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share This Article