வெடுக்குநாறி மலையில் கஜேந்திரன் எம்பி உட்பட்ட ஏழு பேரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றது பொலிஸ்!

வெடுக்குநாறி மலையில் கஜேந்திரன் எம்பி உட்பட்ட ஏழு பேரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றது பொலிஸ்!

editor 2

வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட ஏழு பேரை பொலிஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.

இன்று இரவு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இழுபறி நிலை காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

6மணிக்கு பின்னர் வழிபாட்டில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்ததாக தெரியவருகிறது.

இதேவேளை,

வழிபாட்டுப் பொருட்களும் பொலிஸாரால் அகற்றப்பட்டதாகவும் வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை,

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட ஏழு பேர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

Share This Article