தான் இரண்டு ஓய்வூதியங்களை பெறுவதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்
ளதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.
மிகிந்தல ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு வலஹதம்மரட்ண தேரர் முன்வைத்
துள்ள குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனக்கு வழங் கப்படும் ஓய்வூதியத்தை மாத்திரம் நான் பெறுகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்
தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை 97000 ரூபாவாக அதிகரித்தார். எனினும் எனக்கும் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜயதுங்கவுக்கும் இந்த ஓய்வுதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் இது சரிசெய்யப்பட்டது.
எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் ஓய்வூதியம் சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது-என்றார்.