பஸில் ராஜபக்ஷ அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இலங்கை அரசியலில் ராஜபக்ஷக்களால் இனி எதையும் செய்ய முடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மகளின் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம், இவ்வருடம் ஒக்ரோபர் மாதம் வரும்
போது இலங்கையில் புதிய அரசொன்றே ஆட்சியில் இருக்கும்.
ஒன்றரை வருடத்துக்கு முன்னர் விமான நிலையத்தில் இந்த பக்கம் இருந்து அந்த போகமுடியாமல் தவித்தவர் தான் பஸில். அவர்களால் இலங்கை அரசியலில் மீண்டும் ஒன்றும் செய்ய முடியாது.
அண்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது, மற்றுமொரு அண்ணன் அமைச்சராக இருந்தபோது, மற்றுமொரு சகோதரர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மகன்மார் அமைச்சராக இருந்தபோது போட்ட ஆட்டத்தை இனி போடமுடியாது.
வெள்ளத்தில் மிதந்துவரும் கட்டையொன்றை கண்டதும் கீரியும், பாம்பும் அதில் ஏறும்.
ஆனால் வெள்ளம் இல்லாத சூழ்நிலையாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தற்போது
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அலைவீசுகின்றது. அந்த அலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரணில் -மஹிந்த-மைத்திரி -சந்திரிக்கா எல்லாம் ஒன்றாக இணைந்துள்ளனர்.-என்றார்.