நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய
சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும், 62 புதிய சட்டங்களை,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சட்ட
சீர்திருத்தம் தொடர்பாக வட்ஸ் நியூ என்ற இளம் சட்டத்தரணிகளுடனான
கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்கிநாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். பொது நிதி முகாமைத்துவசட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச்சட்டம், விவசாயச் நவீனமயமாக்கல்
சட்டம் என்பவற்றைப் போன்றே இந்த அனைத்து இலக்குகளை அடையக்கூடிய
பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டுவரப்படும்.
தற்போதுள்ள முதலீட்டுச் சபைக்குப் பதிலாக முதலீட்டு ஆணைக்குழுவொன்று
உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்தி ஆணைக்குழு நிறுவப்படும். அத்தோடு சுற்றுலா தொடர்பான
புதிய சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்கா என்பவற்றின் பாதுகாப்புக்
காக புதிய சட்டங்கள் கொண்டுவருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
இப்புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் அந்தசட்டங்களை யாராலும் இரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக
செயல்படுத்தாதிருக்கவோ முடியாது என்றார்.