சாந்தனின் புகழுடல் நல்லடக்கம்! (காணொளி)

editor 2

இந்தியாவில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டுவரப்பட்ட தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் – மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள வெள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று முற்பகல் உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பின்னர்,

சிவப்பு – மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரின் புகழுடல் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவர மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டியைக் கடந்து வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லம் இருந்த வீட்டு வளவில் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர்,

வல்வெட்டித்துறை நகர் ஊடாக பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் எடுத்துச் செல்லப்பட்டது. வீதிகளில் திரண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் பங்குகொண்டிருந்த நிலையில் அவருடைய புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share This Article