சாதாரண தரப் பரீட்சைப் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்!

சாதாரண தரப் பரீட்சைப் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்!

editor 2

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழு பாடங்களாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதிருக்கவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Share This Article