சாந்தன் எழுதிய உருக வைக்கும் கவிதை!

editor 2

சிறையிலிருந்து விடுதலையாகி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்து உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகி இன்று தமிழகத்தில் உயிரிழந்த சாந்தன் எனும் சுதேந்திரராஜா இறுதியாக எழுதிய கவிதை என்ற வகையில் அவருடைய கையெழுத்துடனான கவிதை ஒன்றை கொடுந்தமிழன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சாந்தன் இன்று காலை காலமான நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடலை எதிர்வரும் இரண்டு தினங்களில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சாந்தனின் உடலை காண்பதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில்,

அரசே

வன் செவிதான் நின் செவி

விடுதலைக்கு ஏங்கி

யாம் பாடும் பாடல்

உன்னை எட்டவில்லையா

எப்படி எட்டும்

சாளரங்களை தகரத்தினால்

அடைத்து விட்டல்லவா

நடமாட விட்டிருக்கிறாய்

இல்லை இல்லை

உயிர் வாழ அனுமதித்திருக்கிறாய் (”சிறையல்ல இது சிறப்பு முகாம்” தொகுப்பிலிருந்து) என்று அந்தக் கவிதையில் எழுதப்பட்டுள்ளது.

Share This Article