இந்தியாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு மீனவர் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாயின் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகி, இலங்கை மீனவர்களுடன் இணைந்து போராடுவதற்கு தயாராக உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துமீறிய சட்டவிரோத இந்திய கடற்றொழிலாளர்களினால் இலங்கையின் வளங்கள் சுரண்டப்படுவதால் இங்குள்ள மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனினும், இதனை தொடர்ந்தும் அனுமதிக்கும் வகையில் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாயின், தாம் அமைச்சரவையில் இருந்து விலகி இலங்கை கடற்றொழிலாளர்களுடன் இணைந்து கடலுக்கு சென்று போராடுவதற்கு தயாராக உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.