இலங்கையில் உள்ள ரஷ்யர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

இலங்கையில் உள்ள ரஷ்யர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

editor 2

இலங்கையில் உள்ள ரஸ்யர்கள் சட்டதிட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் எந்த விதமான நிற இன பாரபட்சத்தையும் தேசியவாதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

உனவட்டுவினவில் வெள்ளையான நபர்களிற்கான இரவுநேர களியாட்ட நிகழ்வு  சர்ச்சை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ரஸ்ய தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பெப்ரவரி 24ம் திகதி உனவட்டுனவில் உள்ள சில தொழில் முயற்சியாளர்கள் டிரெஸ்கோட் வைட் என்ற இரவுநிகழ்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்துள்ளனர்.

இந்த நிகழ்வை திட்டமிட்ட நபரும் களியாட்ட நிகழ்வை நடத்துவதற்கான இடத்தை வழங்க சம்மதித்த இரவு விடுதி உரிமையாளரும் ரஸ்ய பிரஜைகள்  என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான தகுதி குறித்து விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களிற்கு ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

மேலும் எவரையும் காயப்படுத்தும் நோக்கம்இல்லாததால் இந்த நிகழ்வை இரத்துச்செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்ய அரசாங்கம் அனைத்துவகையான இனநிற பாரபட்சம் மற்றும் தேசியவாதத்தை கண்டிக்கின்றது என்பதை ரஸ்ய தூதரகம் வலியுறுத்தவிரும்புகின்றது.

இந்த அநீதிகளின் எந்த வெளிப்பாட்டையும் எதிர்ப்பதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்இ உக்ரைனில் இதனை அழிப்பதற்காகவே ரஸ்ய ஆயுதபடையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஸ்யர்களும் நிரந்தரமாக வசிப்பவர்களும்  இலங்கையின் சட்டவிதிகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் பழக்கவழக்களை மதிக்கவேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.

Share This Article