தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர் ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் ராகவன் காலமானார்.
இது குறித்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று இயற்கையெய்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மூத்த போராளியான ஆர். ஆர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.