இலங்கை மின்சாரசபையின் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ்குணவர்த்தன நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
மின்சாரசபை பேச்சாளருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குப்பிவிளக்கினை பயன்படுத்தி சிறுவர்கள் கல்விகற்கவேண்டும் என தெரிவித்த மின்சாரசபையின் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை,
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தமது கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
அதேநேரம் இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பை கோரியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பிள்ளைகள் தேவைப்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி படிக்க வேண்டும் என்று நோயல் பிரியந்த கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோன்ற நிலைமைகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கிய முந்தைய தலைமுறையினரின் முன்மாதிரியை அவர் தமது கருத்தின்போது மேற்கோள் காட்டியிருந்தார்.
எனினும் விமர்சனங்களைத் தொடர்ந்து, பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் மற்றும் தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பையும் கோரியுள்ளார்.