இணைய அணுகலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா கவலை!

இணைய அணுகலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா கவலை!

editor 2

இணைய அணுகலை கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன்
மூலமும் பொது மக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக நாம் குரல் கொடுக்க வேண்டுமென பொது உறவுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் எலிசபெத் அலன் தெரவித்தார்.

இலங்கையின் நாடாளுமன்றம் ஜனவரி மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறை
வேற்றியபோது, கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் அது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது என்றும்
குறிப்பிட்டார்.

‘உலகளாவிய ஊடக பரப்பும் ஜனநாயகத்தின் மீதான அதன் தாக்கமும்’ என்ற
தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நேற்று திங்கட்கிழமை
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This Article