யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
208 ஆண்டுகளைக் கடந்த ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.
கல்லூரியின் முன்னாள் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.