கெஹலியவின் உடல் நிலை தொடர்பில் விசாரிக்க விசேட நிபுணர்கள் குழு!

கெஹலியவின் உடல் நிலை தொடர்பில் விசாரிக்க விசேட நிபுணர்கள் குழு!

editor 2

மருந்து இறக்குமதி சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 9 பேர் கொண்ட விசேட வைத்திய நிபுணர்கள்  குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு  மாளிகாகந்த நீதிவான்   உத்தரவிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத  நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை நீதிவான் ஏற்றுக் கொண்டார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல் நிலைமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிபுணர் குழுவில் இருதய நோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் உள்ளடக்குமாறும் நீதிவான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.   

ரம்புக்வெல்லவின் உடல் நிலை தொடர்பிலான விசாரணை அறிக்கைய எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.

Share This Article