இலங்கையில் வறட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டும் என மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயெல் பியந்த குறிப்பிடுகையில்,
வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. நீர்மின்னுற்பத்திகளை அண்மித்த நீர்நிலைகளில் நீர்மட்டம் 83 சதவீதமாக காணப்படுகிறது.
சூரிய மின்சக்தி ஊடாக 04.5 சதவீதமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை ஊடாக 5 சதவீத மின்சாரமும், மின்நிலையங்கள் ஊடாக 64 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறான நிலையில் மின்னுற்பத்திக்கான நாளாந்த கேள்வி 3 முதல் 04 ஜிகாவொட் அளவுக்கு உயர்வடைந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.