மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்தார் எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார்.
மீனவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த குழுவினர் கடந்த நவம்பரில் கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளுக்கு மீன்பிடிக்காக ரயன்புத்தா மற்றும் லோரன்ஸ் ஆகிய மீன்பிடி படகுகள் மூலம் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் டிசம்பர் 2 ஆம் திகதி மியன்மார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.