இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு, அவற்றில் 200 யானைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளன.
இதனை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் (பாதுகாக்கப்பட்ட பகுதி முகாமைத்துவம்) மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.
அதில், துப்பாக்கிச் சூட்டினால் 83 யானைகளும், யானை வெடிகளால் 47 யானைகளும், மின்சார தாக்கி 66 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.
மேலும், உடல் நலக்குறைவு, இயற்கை காரணங்கள் அல்லது விபத்துக்களால் 70 யானைகளும், ரயிலில் மோதி 23 யானைகளும் உயிரிழந்துள்ளன.
கடந்த வருடம் செம்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அதிகளவான யானை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. தொடருந்து மோதியதில் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.