முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, வைத்தியர்கள் எண்மர் பணியாற்றவேண்டிய புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் மாத்திரமே கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.
நாளொன்றுக்கு நேயாளர்கள் நூறு பேர் வரையானோர் மாத்திரம் பயன் பெறுகின்ற மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு எட்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், ஒரு நாளைக்கு 300 – 350 வரையான நோயாளர்கள் பயன் பெறுகின்ற புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வெறுமனே நான்கு வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர்.
எனவே, அதிகளவு மக்கள் வாழும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யுமாறும் இந்த கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.