மன்னாரில் சிறுமி கொலை; அடையாளத்தை மறைத்து தங்கியிருந்த நபர் கைது!

மன்னாரில் சிறுமி கொலை; அடையாளத்தை மறைத்து தங்கியிருந்த நபர் கைது!

editor 2

தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட தென்னந்தோட்டத்தின் காவலாளி சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தனது பெயர் அடையாளங்களை மறைத்து அங்கு தங்கியிருந்தார் என்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் அறியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

சிறுமியின் பெற்றோர் வேலைநிமித்தம் புத்தளத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சிறுமி தனது அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுமி வீட்டுக்கு அண்மையாக உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு சென்ற சிறுமியை நீண்டநேரம் காணவில்லை. இதையடுத்து வீட்டார் அவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபரிடமும் சிறுமி குறித்து விசாரித்துள்ளனர்.

ஆனால், அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சி. சி. ரீ. வி. கமெரா பதிவுகளை சோதித்தபோது சிறுமியின் பின்னால் சந்தேகநபர் செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததுடன், இரவு முழுவதும் தேடிய நிலையில் நேற்று அதிகாலை சிறுமியின் உடலம் அந்த தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் கண்டு
பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரித்ததில், அவரின் வயது 52 என்றும் திருகோணமலை குச்சவெளியை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. ஆனால், அவர்
தனது பெயர் விஜயேந்திரன் என்று கூறியே வசித்தார் எனத் தெரிய வந்துள்ளது.

இதேநேரம், சம்பவ இடத்துக்கு சென்ற பதில் நீதிவான் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தலைமன்னார் மக்கள் வீதியை மறித்து போhட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பதில் நீதிவானிடம்
மனு ஒன்றையும் வழங்கினர்.

Share This Article