யாழ்ப்பாணம் வடமராட்சியின் மந்திகை மாக்கிராய் பகுதியில், வீதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரவிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை மாக்கிராய் வீதியில் இன்று காலை ஐந்து மணியளவில் நெல்லை பரவிக் கொண்டிருந்த நபர் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
காலையில் அதிக பனி மூட்டம் மற்றும் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை. அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பருத்தித்து