தெற்காசியாவில் இலங்கையிலேயே அதிக மின்சார கட்டணம் அற விடப்படுகிறது என்று வெரிட்டே றிசேர்ச் (Verité Research) நிறுவ னம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் மின்சார கட்டணத்தை விட இலங்கையின் மின் சாரக் கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு அதிகம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால், அங்கு மின்சார கட்டணம் இலங்கையை விடவும் மிகக் குறைவாகும். இலங்கையில் 100 அலகுகள் மின் சாரத்தை பயன்படுத்தும் ஒரு வீடு செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் பாகிஸ்தானில் அதே எண்ணிக்கையிலான அலகுகளைப் பயன்படுத்தும் வீட்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.
300 அலகுகளை பயன்படுத்தும் ஒரு வீடு செலுத்த வேண்டிய கட்டணம் 97 சதவீதம் அதிகமாகும்.
இலங்கையில் மின்சார கட்டண அதிகரிப்பு சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு வழங்கிய உறுதிப்பாட்டுடன் தொடர்புடையது என்றும் வெரிட்டே றிசேர்ச் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் திட்டமிடப்பட்ட வரி குறைப்பின் கீழ், அது 4 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையர்களே அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்துகின்றனர் என்றும் கூறப்பட்டது