அண்மையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் குறைபாடுகள் இருக்குமாயின், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றில் இன்று முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில பிரிவுகளை நீக்குவதற்கு அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த போதிலும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
எனவே இந்த விடயத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகளையும், அரசாங்கம் மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் குறைபாடுகள் இருக்குமாயின், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.