பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கைக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர நாள் இன்று தென்னிலங்கையில் கொண்டாப்படுகின்ற அதேவேளை வடக்கு – கிழக்கில் கரி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கான அழைப்பினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் விடுத்திருந்தனர்.
கொழும்பில் காலி முகத்திடலில் சுதந்திரநாள் கொண்டாட்டத்தினை நடத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை,
கிளிநொச்சியில் மாபெரும் பேரணியை முன்னெடுக்கப் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு இன்று போராட்டமும் நடைபெறவுள்ளது.
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ம் திருத்தத்தினை முற்றாக நிராகரித்தமை, திம்புப் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியமை, பொறுப்புக்கூறலை வலியுறுத்தியமை உள்ளிட்ட கோரிக்கைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளன.