முல்லைத்தீவு மாவட்டம் புது மாத்தளன் கடலில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் சாலைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டு நீரில் மாயமாகியிருந்தார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து தேடுதல் நடாத்தியும் சடலம் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் நேற்றைய தினம் மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம் சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.