எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட இருபது மடங்கு ஆபத்தான வைரஸை உலகநாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Disease X என அடையாளப்படுத்தப்படும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
தொற்றுநோய் இதுவரை அடையாளம் காணப்படாததன் காரணமாக Disease X எனும் பெயரில் அடையாளப்பப்படுத் தப்படுகிறது.
இந்த தோற்று நோய் கொரோனா வைரஸ் தொற்றை ஒத்த அல்லது அதைவிட ஆபத்தான
தோற்று நோயாக இருக்கக்கூடுமென குறிப்பிடப்படுகிறது.
மேலும் இது ஒரு வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை இன மாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் ஊகிக்கின்றது. இதன்படி, கொவிட் 19, எபோலா, நிபா போன்ற ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் பட்டியலில் Disease X தொற்றுநோயும் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தோற்று பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய எச்சரிக்கை மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, உலக நாடுகள் தொற்று நோயை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தற்போதே கவனம் செலுத்துவது அவசியம்.