கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்! ஐம்பது பேர் தப்பி ஓடினர்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்! ஐம்பது பேர் தப்பி ஓடினர்!

editor 2

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து 50 பேர வரை தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும், அவர்களில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரு குழுக்கழுக்கு இடையிலான மோதலின் பின்னரே கைதிகள் தப்பிச் சென்றனர்
என்று புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் தப்பி சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article