மின்சாரம் தாக்கி தென்மராட்சியில் இளைஞர் மரணம்!

மின்சாரம் தாக்கி தென்மராட்சியில் இளைஞர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் தனது வீட்டில் மின் திருத்தப் பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்..

தென்மராட்சி – வரணி – இயற்றாலை பகுதியில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞரே உயிரிழந்தார்.

நேற்றுமுன்தினம் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி
ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் அளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article