வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் எதிர்வரும் பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
வருடாந்த திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே இது குறித்து அறிவிக்கப்பட்டது.
நெடுந்தீவுக்குரிய வட தாரகை மற்றும் நெடுந்தாரகை படகுகள் திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து சிக்கல் ஏற்படக்கூடும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனினும், படகுகளை திருத்தி போக்குவரத்தில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர், கடற்படையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.