வித்தியா கொலை வழக்கு – இன்று விசாரணைக்கு!

வித்தியா கொலை வழக்கு - இன்று விசாரணைக்கு!

editor 2

மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீடுகள் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மேன்முறை யீட்டு மனுக்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதி மன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் கடந்த 09 ஆம் திகதி அழைக்கப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதி பரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளை இன்றையதினம் எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 7 பேர் குற்றவாளி களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் ட்ரயல் அட்பார் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்த நிலையில், தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என்று பிரதிவாதிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

Share This Article