வடக்கு ரயில் மார்க்கத்துக்கு மேலதிகமாக மட்டக்களப்பு தொடருந்துப் பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை,
வடக்கு தொடருந்துப் பாதையில் மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான தொடருந்துப் பாதை இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்துத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (07) முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே தொடருந்து சேவைகள் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.