தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி உண்மையில் வரியல்ல என்றும் மாறாக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வரி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.
கம்பஹா – மினுவாங்கொடை பாடசாலை ஒன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் திருடிய பிறகு நாடு வங்குரோத்தானது. இந்த வங்குரோத்து நிலையில் ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக ஊழல்வாதிகளை பாதுகாத்துக் கொண்டு நாடு இழந்த பணத்தை மக்களை ஒடுக்கி அவர்களிடமிருந்து பெறப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரிஎன்று அழைக்கலாம்- என்றார