மியன்மாரில் பயங்கரவாத குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 56 பேரை சிறப்பு நடவடிக்கை மூலம் மீட்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து எல்லைப் பகுதியை அண்மித்து, மியன்மாரின் கெரன் மாகாணத்தின் மியாவெட்டி பகுதியில் பயங்கரவாத குழு ஒன்றால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர், யுவதிகள்
56 பேர் தடுத்து வைக்கப்பட்டு, பல் வேறு கணினி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்ற தகவல் அண்மையில் வெளியானது.
இவர்களை சிறப்பு நடவடிக்கை ஒன்றின் மூலம் மீட்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை – மியன்மார் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடை யிலும் பிம்ஸ்ரெக் தூதுவர்கள் மற்றும் மியன்மாரின் பிரதி வெளி விவகார அமைச்சர் இடையிலும் இடம்பெற்ற தொலைபேசி
கலந்துரையாடலில் இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்ரெக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து தூதுவர்களுடன் இணைந்து மியன்மாரின் பிரதி வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக அவர்கூறியுள்ளார்.
இந்த இரு கலந்துரையாடல்களும் மிகவும் வெற்றியளித்துள்ளதாகவும் இந்த பிரச்சினை தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.